பிரதான செய்திகள்

திவிநெகும பரீட்சை நடத்துவதில் சிக்கல்! 2லச்சம் பேர் விண்ணப்பம்

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான  பரீட்சை நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும் குழுவினருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

Related posts

டெங்கு மற்றும் கொரோனா தொடர்பில் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

Editor

பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை-குஷ்பு

wpengine

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine