பிரதான செய்திகள்

திறைசேரியால் இதுவரை பணம் செலுத்தப்படாத நிலையில் தேர்தல் சாத்தியமில்லை! -சாந்த பண்டார-

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணம் திறைசேரியிடமிருந்து இதுவரை கிடைக்காமையே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தாமதமாவதற்கான காரணம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

திறைசேரியிடமிருந்து குறைந்தபட்சம் 300 மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுமாயின், அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பணம் மற்றும் பாதுகாப்பை பெற்றுத்தருமாறு நிதி அமைச்சிற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும் அரச அச்சகர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இந்த கோரிக்கைக்கு பொலிஸ் திணைக்களத்திடமிருந்து உரிய பதில் கிடைத்துள்ள போதிலும், பணத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதில்களும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் முன்னுரிமை அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தேங்காய் விலையினை குறைக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது

wpengine

அமைச்சர் றிஷாட்டை சந்தித்த முசலி கூட்டுறவு சங்கம்

wpengine