உள்துறை வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்தை திறப்பதற்கு சென்றிருந்தபோது, அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, அமைச்சர் பல்கலைக்கழக நுளைவாயிலிலேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பின்னர், அவர் சுமார் 2 மணிநேரம் காரின் மீது ஏறி மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.
இதன்போது, கலாசார நிலையத்தை திறப்பதைவிட தமக்கு பல பிரச்சினைகள் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சகலரும் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்கமுடியும் எனவும் அனைத்து பிரச்சினைகளையும் தான் அறிவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.