பிரதான செய்திகள்

திரைப்படத்திற்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு

“ஹோ கான பொக்குன” என்ற சிங்களத் திரைப்படத்தில் புத்த பகவானின் சூத்திர உபதேசம் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் இன்று முறைப்பாடு செய்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குமாருக்கு திரையிட்டு காட்டப்படும். இந்த திரைப்படம் காண்பிக்கப்படவில்லை.

சிறுவர் திரைப்படம் என்பதால்,நாங்களும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.இந்த திரைப்படத்தின் இயக்குனர் மிக தவறாக சூட்சுமமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும். திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்து விட்டது.

இதனால், திரைப்படத்தின் டி.வி.டிகள் பொதுமக்களிடம் செல்வதை தடுக்குமாறு கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரிப்பு கிராமத்தில் கடற்படை சிப்பாய் தாக்குதல்! 56 பேர் கைது

wpengine

ஒட்டமாவடியில் சுதந்திர தின மரநடுகை

wpengine

வட கிழக்கு இணைப்பிற்கு ரவூப் ஹக்கீம் எதிரனாவரல்ல -சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

wpengine