பிரதான செய்திகள்

திருவோடு ஏந்தி பிக்குமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதியங்கனை ரஜமஹா விகாரை பிக்குமார் திருவோடு ஏந்தி நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் பதுளை முதியங்கனை மகாவிகாரையின் பிரதம விகாராதிபதி முருத்தெனியே தம்மரத்ன தேரர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இவ்வாறு திருவோடு ஏந்தி நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதியங்கனை விகாரையில் தங்கியிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பிக்குகள் திருவோடு ஏந்தி பதுளை நகரில் உலர்உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை சேகரித்துள்ளனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பௌத்த விகாரைகள் ஊடாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் பரீட்டை எழுதும் மாணவிக்கு இலக்கம் கொடுத்த ஆசிரியர்

wpengine

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிய தடை

wpengine

சமுர்த்தி புதிய தெரிவில் 519 பேர் நீக்கம்! நுவரெலியா பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine