செய்திகள்பிரதான செய்திகள்

திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி..!

நேற்று (18) மாலை 5 மணியளவில்மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது.

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சந்திவெளியைச்சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளைஞனாவார். கடந்த 9 தினங்களுக்கு முன் தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் சிறு வயது முதல் ஈடுபாடுள்ள இவ்விளைஞன் சந்திவெளியில் இன்றிரவு இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக வெதுப்பகமொன்றில் உணவினைக் கொள்வனவு செய்ய வந்த போதே விபத்தில் சிக்கிக் கொண்டதாகர் தெரிவிக்கப்படுகிறது

Related posts

இவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 137 பஸ் விபத்துக்கள் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

Editor

பணத்திற்கு சோரம் போகும் சிலரால் அடகு வைக்கப்படும் முஸ்லிம்கள்.

wpengine

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம், இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு . !

Maash