அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களை முடக்கும் முயற்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஈடுப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டம் பராக் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்திவைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை ஒபாமா கடந்த வருடம் கொண்டுவந்திருந்தார். இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுகள் வரை ஆகலாம் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய அதிபர் டிரம்பின் நிர்வாகம், இந்த திட்டத்தை முடக்கும் நோக்குடன், திருநங்கைகளை இராணுவத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்களை விநியோகம் செய்வதை ஆறு மாதகாலம் ஒத்திவைத்துள்ளது.
இதற்கான உத்தரவை பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டீஸ், பிறப்பித்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவு, இராணுவத்தில் பணிபுரியும் கனவுடன் இருந்த திருநங்கைகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.