கட்டுரைகள்பிரதான செய்திகள்

திருகோணமலையில் 2 ஆசனம் சஜித் அணிக்கு கிடைக்குமா?

முகநூல் ஆர்வலர்கள்,வல்லுனர்கள் மற்றும் ஆர்வக்கோலாறு உள்ளவர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றது. இந்த நிலையில் கடந்தகால தேர்தல்களுடன் ஒப்பிட்டு ஒருபார்வை.

2019 ஜனாதிபதித் தேர்தல்:

Mutur Division
———————
Sajith:          74171
Gothabaya:4925

Trincomalee Division:
—————————-
Sajith:          56594
Gothabaya:12818

Seruwela Division:
————————
Sajith:          74171
Gothabaya:4925

Total Votes:

Sajith:         158970
Gothabaya:49046

இந்த வாக்குகளில் திருகோணமலைத் தொகுதியில் சுமார் 45000ஆயிரம் தமிழ்வாக்குகள்.மூதூர் தொகுதியில் சுமார் 10000 வாக்குகள் தமிழ் தரப்பிற்கு உரியது. இதனடிப்படையில் சுமார் 40000 ஆயிரம் வாக்குகளுடன் TNA ஒரு ஆசனத்தை பெறும்.

மூதூர் தொகுதியில் கிடைத்த 4925 வாக்குகளுடன் சுமார் 2000 வாக்குகள் SLPP பக்கம் அதிக பட்சம் திரும்பலாம்.

சேருவலத் தொகுதியில் கிடைத்த 28205 வாக்குகளில் கணிசமானளவு சஜித் அணிக்கு சரிவு உள்ளது. காரணம்
1-UNP இரண்டாக பிளவு பட்டது
2-சஜித் அணியில் பலமான சிங்கள வேட்பாளர் இல்லை
3-UNP சார்பாக கடந்தமுறை சிங்கள வாக்குகளை இம்ரான் அதிகம் பெற்றார். இம்முறை இவருக்கான ஆதரவு குறைந்துள்ளது.
4-ஆளும்கட்சி என்ற கோஷம் சிங்கள மக்களின் வாக்கு மாற்றத்தில் கணிசமாளவு தாக்கம் செலுத்தும்.

இதற்கமைய
மூதூர் தொகுதி:-2000
திருகோணமலை தொகுதி: -45000
சேருவல தொகுதி:-15000

மொத்தமாக:80000 ஆயிரம் வாக்குகளை சஜித் அணி இழக்கும். இதன்மூலம் எதிர்வரும் தேர்தலில்:

சஜித் அணி: சுமார் 80000 -85000ஆயிரம் வாக்குகளை பெறும்.

கோதபயா அணி: சுமார் 65000. ஆயிரம் வாக்குகளை அதிகபட்சமாக பெறலாம்.

ஆதலால் சஜித் அணிக்கு 2 ஆசனங்கள். கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனால் கடந்த தேர்தலில் இரண்டாம் நிலையில் இருந்த கௌரவ இம்ரான் பின்தள்ளப்பட்டு, மூன்றாம் நிலையில் இருந்த கௌரவ தௌபீக் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

தற்போது கௌரவ மக்ரூப் மற்றும் தௌபீக் இருவருக்கும் விருப்பு வாக்கில் பலத்த போட்டி நிலவுகிறது.

1970 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டுவரை பல ஆளும் கட்சி/எதிர்க்கட்சி சார்ந்த தலமைகள் வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளது.தேசிய அரசியலில் மாற்றம் மற்றும் கட்சி மாற்றங்கள் தொடர்ந்து இடம் பெறுகிறது.இருந்தும் கிண்ணியாவில் இந்த தலமைகளின் வாக்குகள் 1000-2000 வரையிலே வித்தியாசம் உள்ளது வரலாறாகும்.

கிண்ணியா தலமைகளின் விருப்பு வாக்குகளை தீர்மானிக்கும் சக்தியாக மூதூர்,புல்மோட்டை மற்றும் தம்பலகாம வாக்குகளே உள்ளது.

அத்துடன் முகநூல் பிரச்சாரங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதற்கு 2015 பொதுத் தேர்தலும்,இதன் பின்னரான உள்ளூராட்சி தேர்தலும் சான்றாகும்.ஏனெனில் முகநூளில் தலமைகளிடம் பயனடைந்தவன் மற்றும் பயனடைய எதிர்பார்த்திருப்பவன் அல்லது மற்றவனை விட தான் முதலில் பயனடைவதற்காக தலமையின் திருப்திக்காக உள்ளவர்களே சண்டை இடுகின்றனர்.இவர்கள் தேர்தல்கால ஈசல் பூச்சிகள்.அடுத்த தேர்தலில் அடுத்த தலமையிடம் சென்று அதே கூத்தையே ஆடுவார்கள்.

குறிப்பாக மூதூர் வாக்குகள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும்.புல்மோட்டை /குச்சவெளி/தோப்பூரில் ACMC பலமாகவும் ,தம்பலகாமத்தில் SLMC :ACMC சம்பலத்திலும் உள்ளது.இந்தப் பிரதேச வாக்குகளை விட கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மூதூரில் SLMC பெற்ற சுமார் 8 ஆயிரம் வாக்குகள் முக்கியம் பெறுகிறது.

மூதூரில் SLMC வேட்பாளரோ அல்லது SLMC ஊர்த் தலமைகளே பிரச்சாரங்களில் மந்தமாகவே உள்ளனர். குறைந்த பட்சம் எதுவித வீட்டு அல்லது பிரதேச கூட்டங்கள் இதுவரையில் இடம்பெறாமல் உள்ளது.

அத்துடன் கடந்த காலத்தைப் போன்று கிண்ணியாவின் இரண்டு தலமைகளுக்கும் ஆதரவாக எதுவித பகிரங்க ஆதரவு கூட்டங்களும் இடம்பெறவில்லை.இந்த நிலையில் கிண்ணியா வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் கடந்த தேர்தலைவிட சரிவை எதிர்நோக்கலாம்.

இதில் தேசிய காங்கிரஸ் போட்டியிட்டால் மூதூர் தொகுதியில் கடந்த முறை பெற்ற 4925 வாக்குகளுடன்  SLMC மூதூர் 1000-2000 வாக்குகள் பிரிந்து போகலாம்.இதனால் பாரிய தாக்கம் இல்லை.

மூதூர் மக்கள் பல்வேறு பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தீர்க்கமான முடிவை ஓரிரு வாரத்திற்குள் வரக்கூடிய நிலமை உள்ளது.இந்தமுடிவின் மூலமே கிண்ணியாவின் இரண்டு வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் மக்கள் கண்டுகொள்ளலாம்.

UNP வேட்பாளர் ரோஹினா மக்ரூப் வெற்றி பெறாவிட்டாலும் தேசிய கட்சியில் இந்த தேர்தல் மூலம் தடம்பதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆட்சி அமைக்க முடியாத சஜித் அணியில் கௌரவ இம்ரான் தோல்வி கண்டால் ,இவருக்கான அரசியல் எதிர்காலம் சூன்யமாகலாம்.

SLPP வேட்பாளர் உவைஸ் வெற்றி பெறாவிட்டால்,அந்த இடத்தை மீண்டும் நஜீப் மீள இணைத்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

Fahmy MBM-UK
M:00447870763570

Related posts

ரம்பை கண்டித்த ரவூப் ஹக்கீம்

wpengine

பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் இணைத்து கொள்ள வேண்டும்

wpengine

கொரோனா வைரஸ் அமெரிக்காவால் உருவாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது

wpengine