திருகோணமலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, ஶ்ரீ சன்முக வித்யாலயத்தில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, உவர் மலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் டாக்டர் செ. அருட்குமரன் தெரிவித்தார். அதில் கிண்ணியாவிலேயே அதிகம் இறப்பு சம்பவித்துள்ளதாக வும் அவர் சுட்டிக்காட்டினார்
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2088 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுள்ளவர்கள் டெங்கின் தாக்கம் அதிகரித்த பின்னர் வைத்தியமனையை நாடுவதே இதற்கு காரணமாகும் என்று அவர் கூறினார்.
இதுவரை கிண்ணியாவில் 911 பேர் பாதிக்கப்ட்ட நிலையில் 9 பேர் இறந்தனர். அதேவேளை குறிஞ்சாக்கேணிப்பிரிவில் 109 பேர்பாதிக்கப்பட்டநிலையில் முன்று பேர் இறந்தனர்.
திருகோணமலை பிரிவில் 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பு வெளி பொதுச்சுகாதார வைத்திய பிரிவில் 266 பேரும் மூதுாரில் 418 பேரும் தொற்றுக்குள்ளாகிய போதும் இறப்பு தடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளியில் 5 பேர் இனம்காணப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். இவ்வாறு மாவட்டத்தில் 14 பேர் இறந்துள்ளனர். இவ்வாறே மட்டக்களப்பில் 900 பேர் வரையில் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கல்முனைப் பிரிவில் 700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இறப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. திருகோணமலை கிண்ணியாப் பிரிவல் தடுப்பு நடவடிக்கைள் முடக்கி விடப்பட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்களின் அவதானம் போதுமானதாக இல்லை.
இதில் அவர்கள் பொது இடங்கள் மற்றும் அயல் இடங்களில் அவதானமாக இருந்தால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். மழையும் டெங்கை ஊக்குவிக்கும் வகையிலேயே பெய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதுவும் இம்மாதத்திலேயே இந்த திடிர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.