பிரதான செய்திகள்

திருகோணமலையில் சூழலுக்கான பாதிப்புகளை நிறுத்த வேண்டும்: மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டத்தில் சூழலுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகளையும், விளைவுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லை என்றால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஜேகாப் பர்க் விடுதியில் உப்புக்காற்று குறுந்திரைப்பட இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று வை.எம்.எம்.ஏ.யின் பொதுச் செயலாளர் (திருகோணமலை கிளை) எம்.எம்.முக்தார் தலைமையில் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளூராட்சி மன்றங்கள் தான் கையாள வேண்டும். பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

திருகோணமலையில் சல்லி, சிவபுரி, புல்மோட்டை, நிலாவெளி, மூதூர் மற்றும் கரையோரப் பகுதிகளைக் கொண்ட அனைத்து பிரதேசங்களும் சீர்படுத்தப்பட வேண்டும் எனவும் கரையோரப் பகுதிகள் அசுத்தங்கள் நிறைந்ததாக காணப்படுவதால் பல்வேறு வகையான நோய்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதனை உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சம்மாந்துறையில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பணம் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட்

wpengine

திறைசேரிக்குத் பணங்களை திருப்பும் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும்

wpengine

இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு-சிறிமதன்

wpengine