துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
ஒரு கதிரையில் தகுதியானவர் அமரும் போது, அந்த கதிரையை அமரும் நபர் அலங்கரிப்பார். தகுதியற்றவர் அமர்ந்தால், அந்த கதிரையால் அமர்ந்த நபர் அலங்கரிக்கப்படுவார். நாம் தெரிவு செய்யப் போகின்றவர்கள் எவ்வாறானவர் என்பது பற்றி சிந்தித்தேயாக வேண்டும். கதிரையால் அலங்கப்படுபவரை ஆதரித்து எமக்கு பயனில்லை. அது அவருக்கை நன்மையாவது.
எம்மை நோக்கி பல பிரச்சினைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நுனுக்கமானவை. சிலவை சட்ட ரீதியாக அனுக வேண்டியவைகள். இதனை சிந்தித்து, உள் நோக்கம் புரிந்து செயற்படுபவர்களைத் தான், இம் முறை நாம் எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும். தவறினால் எமது சமூகம் மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடும். இப் பிரச்சினைகளை முறையாக அனுகுபவர்களைத் தான் கட்சிகள் தேர்தலில் களமிறக்கியுள்ளனவா என்ற கேள்விக்கு, எந்த வித தயக்கமுமின்றி ” ஆம் ” என்ற பதிலை அ.இ.ம.காவினரால் வழங்க முடியும். ஏனைய கட்சியினர் பற்றி நீங்கள் சிந்தித்து கொள்ளுங்கள்.
இம் முறை திகாமடுல்லவில் அ.இ.ம.கா சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறான ஆற்றல் கொண்டவர்கள். இவைகள் பற்றி தனித்தனியாக விளக்க முடியும். இக் குழுவில் சட்ட ரீதியான ஒரு பலமான குழு உள்ளது. அட்டாளைச்சேனை வேட்பாளர் கபூர் சட்ட கலாநிதி ( முன்னாள் நீதிபதி ), முதன்மை வேட்பாளர் வை.எல் ஹமீத் சட்ட முதுமாணி, பொத்துவில் வேட்பாளர் முஷாரப் சட்டத்தரணி. இதனை விட பலமான அணியை யாரும், எக் கட்சிலும் காட்டிட இயலாது. இந்த அணிக்கே மயில் அதிகாரம் கேட்கிறது.
இக் குழு எம்மை வழி காட்டிட பொருத்தமானதா, இக் குழுவின் கையில் அதிகாரத்தை வழங்கலாமா. இவ்வாறு படித்த நாகரீகமான அணியினரிடம் ஒரு தடவை அதிகாரத்தை வழங்கித் தான் பார்ப்போமே! தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த அணியை விட பொருத்தமான அணி ஏதுள்ளது. எதிர்காலத்தை சிந்தித்து செயற்படுவோம்..
எம் தலையெழுத்து எமது விரல்களிலேயே உள்ளது.