பிரதான செய்திகள்

திகன சம்பவம் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட்டன ஹக்கீம்

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது கண்டி, திகனையில் முஸ்லிம்களுக்கு
எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவேதான் ராஜபக்ச சிறுபான்மையினருக்கு பயப்படுவதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

திகன வன்முறைகளின் பின்னால் யார் இருந்தார்கள், அவர்கள் எவ்வாறு விடுதலை
செய்யப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோதே திகன சம்பவம் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணங்கள்
வழங்கப்பட்டன.

அத்துடன் முன்னர் எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத வகையில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதாக ரவூப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பல மாதங்களின் பின் முசலி பகுதியில் தொடர் மழை (படம்)

wpengine

மன்னார் போக்குவரத்து சேவை பாதிப்பு! மாணவர்கள் பல விசனம்

wpengine

திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

wpengine