பிரதான செய்திகள்

தாவரங்களை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது

தாவரங்களை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இடம்பெறும் தாவர அழிப்பு செயற்பாடுகளை நிறுத்துவது குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

வன அழிப்பினை தடுப்பதற்காக, தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து பிரிவுகளூடாகவும் தொடர்ச்சியாக சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

கிழக்கு முதலமைச்சரை கவிழ்த்த ஏச்சு

wpengine

5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..!

Maash

முஸ்லிம் மக்களுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தும் குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம்.

wpengine