பிரதான செய்திகள்

தாமதிக்காமல் நாளை நண்பகலுக்கு முன் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிக்குமாறு அறிவுறுத்தல்!

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிப்பது தொடர்பில் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளையதினம் (12) கடவுச்சீட்டு பெறுவதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள், நாளை நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

தமிழ், சிங்கள புதுவருடத்தையிட்டு திணைக்கள ஊழியர்களின் பணிகளை ஒழுங்குபடுத்தி, பொதுமக்கள் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பொருட்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கண்டி வன்முறைக்கு கூகுளில் தேடிய இனவாதிகள்

wpengine

குடும்பப் பெண்ணுடன் தர்க்கம் செய்த முகாமையாளர்,உதவி முகாமையாளர்

wpengine

விஜயகலாவுக்கு என்ன தண்டனை என்பதை நாம் அவதானித்துக்கொண்டே இருக்கின்றோம்.

wpengine