பிரதான செய்திகள்

தாஜூடீன் கொலை! சுமித் பெரேரா தனி அறையில் வாக்குமூலம்

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸின் உத்தியோகபூர்வ அறையில், கொலை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பொறுப்பதிகாரியிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பெறப்பட்ட போது மேலதிக நீதவானை தவிர வேறு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தாஜூடீன் கொலை தொடர்பான தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் மரணம்

wpengine

ஐரோப்பிய நாடுகளில் முட்டையில் கலப்படம்

wpengine