பிரதான செய்திகள்

தாஜூடினின் படுகொலை! அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை  சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், முதலாம் சந்தேக நபரான சுமித் பெரேரா  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முல்லைத்தீவு ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

wpengine

அமைச்சர் றிஷாட்டினால் நியமனம் செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப்

wpengine

அத்தியாவசிய சேவைகளாக தொடரும் அரச சேவைகள்!

Editor