பிரதான செய்திகள்

தாஜூடினின் கொலை! அனுர சேனநாயக்கவின் பிணை நிராகரிப்பு

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க ஆகியோரின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை, இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் நிராகரித்துள்ளார்.

மேலும் இவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்குத் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine

வவுனியா மக்களின் காணிப் பிரச்சினை! வன இலாக்கா அதிகாரிகள் மீது இணைக்குழு தலைவர்கள் காட்டம்

wpengine

றிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது

wpengine