பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை! சில நாட்களில் பிரபுக்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கைது

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலரை இதுவரை சிறையில் போட்டுள்ளதாகவும், இன்னும் அடுத்து வரும் நாட்களில் ரக்கர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைதாகவுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றுக்கு நேரடியாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

 

அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் லஞ்ச, ஊழல் மோசடிகள் தொடர்பில் முக்கிய பலரைக் கைது செய்வதாக கூறிவருகின்றது. இருப்பினும், இதுவரையில் யாரையும் அவ்வாறு கைது செய்ய வில்லையே என அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Related posts

போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகரம்..!

Maash

வழக்கொன்றில் ஆஜராகாத காரணத்தினால் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பிடியாணை

wpengine

முஸ்லிம்கள் தொடர்பான போலிப் பிரச்சாரங்கள்! அமைச்சர் றிசாத் பிரதமரை சந்திக்க முடிவு

wpengine