பிரதான செய்திகள்

தாஜுதீனின் கொலை! நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

மேல்மாகாணத்தின்  முன்னாள்  பொலிஸ் மா அதிபரும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான  அனுர சேனநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும்  ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் தொடர்பில் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோதே கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வசீம் தாஜூதினின் கொலை வழக்கு தொடர்பாக   கடந்த திங்கட்கிழைமை (23) கைதுசெய்து   விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொழும்பு மேலதிக நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

wpengine

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு;

Editor

Facebook Live புதிய தொழில்நுாட்பம் விண்வெளியில்

wpengine