சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய மேர்வின் சில்வா நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தக் கூடிய இருவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தான். எனவே அவர்களால் முடியாது போனால் வேறு யாராலும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
அத்துடன் கோத்தாபாய பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
காரணம் வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கியவரே கோத்தா தான். எனவே அவருக்கு பிரதித் தலைவர் பதவியா என அதிர்ச்சியடைந்தேன்.
மேலும் இந்த வெள்ளை வான் மூலம் எனக்கு தேவையானவர்கள் மூவரை தூக்கியதோடு, எனது மகனையும் கொண்டு சென்றார்கள்.
தாஜுடினைப் போல எனது மகனுக்கும் நடந்திருக்கும். ஆனால் எனது மகன் திறமைசாலி என்பதால் அவர்களிடம் இருந்து தப்பி வந்துவிட்டான் என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கதிரை உடைந்து விழுந்து அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதுடன், பின்னர் அவருக்கு வேறொரு கதிரை வழங்கப்பட்டுள்ளது.