பிரதான செய்திகள்

தாக்குதல் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மூலமாகத்தான் நடந்திருக்க வேண்டும்

பலரை பலியெடுப்பதற்கான வெடிகுண்டுகளை தயாரித்து அதனை அவர்களின் உடலில் பொருத்தி அதனை செயற்பட வைப்பதற்கான, அதுவும் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை மிக நேர்த்தியாக செய்து முடிப்பதற்கான சாமர்த்தியம் உள்நாட்டில் இல்லை, அது வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மூலமாகத்தான் நடந்திருக்க வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் உதவியுடனேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை எமது புலனாய்வுப் பிரிவினர்கள் நம்புகின்றர். நாமும் அதனை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றோம்.

நிச்சயமாக வெளிநாட்டில் இருந்து மற்றுமொரு சக்தி செயற்பட்டுக்கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் எமது நாட்டின் தலைமைகளுக்கு கிடைக்கப்பெற்ற போதிலும் அவர்கள் வெறும் சுற்றரிக்கை மாத்திரம் விடுத்துவிட்டு இருப்பது இன்று விமர்சிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மஹிந்த ஆலோசனை

wpengine

மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல்! பொதுபல சேனாவின் உறுப்பினர் விடுதலை

wpengine

மஹிந்த விளங்கிக்கொள்ள வேண்டும்! இனவாதத்தால் அரசியல் செய்ய முடியாது.

wpengine