பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தாக்குதல் நடாத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளரினால் பாடசாலை மாணவரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு தன்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட திருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இன்று இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.


குறித்த தாக்குதலில் காயமடைந்த மாணவன் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இன்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்ப பாடசாலை நுழைவாயிலில் இருந்துவெளியேறிய போதே குறித்த மாணவனுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் மாணவனுடைய தந்தையாரை வினவிய போது,


எனக்கும் குறித்த அரசியல்வாதிக்கும் அரசியல் ரீதியான கருத்து முரண் இருப்பதாகவும், அதன் போது பலமாதங்களுக்கு முன்னர் தமது கட்சிக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் உமது குடும்பம் ஒர் முஸ்லிம் குடும்பம் எவ்வாறு கிளிநொச்சியில் வாழபோகின்றீர்கள் என அச்சுறுத்தியமைக்கு அமைவாக இன்று கணிதப்பிரிவில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் எனது மகனை தாக்கியுள்ளார்கள் .


கல்வியில் முதன்மை நிலையில் உள்ள மாணவர்களில் எனது மகனும் ஒருவர். அவரின் கல்வியை குழப்பும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை செய்து வருகின்றனர் எனது மகனுக்கு நடந்த அநீதி எவனுக்கும் நடக்கக்கூடாது என கூறியுள்ளார்.

Related posts

கொலன்னாவை பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்ய முஸ்லிம் விவகார அமைச்சு நிதியுதவி செய்யவில்லை- மரிக்கார்

wpengine

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Editor

லேக் ஹவுஸ் இப்தார்! ஹக்கீம், றிஷாட் பங்கேற்பு கௌரவிக்கப்பட்ட பாலித

wpengine