பிரதான செய்திகள்

தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலை பார்வையீட்ட அமைச்சர் றிஷாட்

சற்று நேரத்துக்கு முன்னர் சுமார் 25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்பொழுது பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிருவாகத்தினருடனம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கலந்தாலோசித்தார்.

இதேவேளை, பள்ளிவாசல் குண்டர்களால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டதுடன், பள்ளிவாசலுக்கு பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியதாகவும் நிருவாகத்தினர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அமைச்சர், பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியினூடாக அங்கு தற்போதைய நிலைமை தொடர்பில் எடுத்துரைத்தார். தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் சம்பிக்கவின் தொலைபேசிகளை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

wpengine

மோடி இலங்கை முஸ்லிம்களுடன் மோத போகுறாரா?

wpengine

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படமாட்டாது!

Editor