பிரதான செய்திகள்

தவறான தலைவர்களிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளது! ஜனநாயகம் வேகமாக மரணித்து வருகிறது

தவறான தலைவர்களிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹெடிகல்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில்,

நாடு தற்போது இராணுவமயப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இராணுவமயப்படுத்தப்படும் போது, நாட்டின் ஜனநாயகம் வேகமாக மரணித்து வருகிறது.

இதன் ஊடாக இலங்கை சர்வதேசத்திற்கு முன்னால் ஒதுக்கப்படும் நாடாக மாறியுள்ளது.

அத்துடன் அரசாங்கம் நாளுக்கு நாள் எடுக்கும் தீர்மானங்கள் நிலவும் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரமடைய செய்யும் தீர்மானங்கள் இவை அனைத்துக்கும் மத்தியில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறும் எல்லைக்குள் வந்துள்ளது.

தற்போது செய்வதற்கு எதுவுமில்லை. தவறு நடந்து விட்டது. தவறான தலைவர்களிடம் நாட்டை ஒப்படைத்தோம். தவறான சக்திகளிடம் நாட்டை ஒப்படைத்தோம்.

நாங்கள் செய்த அந்த தவறு குறித்து தொடர்ந்தும் மனவருத்ததில் இருக்கின்றோம். அந்த தவறை திருத்த வேண்டும் எனவும் விமலசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Whats App“பில் மறைத்த தகவல் விரைவில் பேஸ்புக்கில் வெளிவரும்

wpengine

”Batticaloa Campus’ அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும்’ – கல்வி அமைச்சர்!

Editor

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது! 36 இலட்சம் ரூபா

wpengine