செய்திகள்பிரதான செய்திகள்

தவனைப்பரீட்சை முறையில் மாற்றம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ரத்து குறித்து எந்த முடிவுமில்லை – பிரதமர் ஹரிணி.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் பரீட்சை முறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு சுமையாக இல்லாத வகையில் பரீட்சை உள்ளடக்கத்தை மாற்றும் செயல்முறை 2028 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

அத்தோடு, தவணை பரீட்கைள் தொடர்பான இறுதி முடிவை எடுக்க நாளை கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறையை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தவனைப்பரீட்சை இனி இல்லையா சற்றுமுன் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்

Related posts

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவில்லை

wpengine

மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

wpengine

பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Editor