பிரதான செய்திகள்

தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை எப்போது விவாதத்திற்கு எடுத்து கொள்வது என்பது தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், இந்த கூட்டத்தில் கருத்து முரண்பாட்டு நிலைமை நீடித்த காரணத்தினால் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாது கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

கூடிய விரைவில் இந்த பிரேரணை விவாத்திற்கு எடுத்து கொள்ளப்பட வேண்டுமென மஹிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், அமைச்சர் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலம் விசாரணை நடத்தி அதன் பின் விவாதம் நடத்தப்பட முடியும் என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts

கையடக்கத்தொலைபேசியை ஆராய்ந்த கணவனின் கைவிரல்கள் மனைவியால் துண்டிப்பு

wpengine

அல்லாஹ்வின் நாட்டத்தில் சமூகக் கெடுபிடிகள் ஒழிய ஈகைத்திருநாளில் இறைஞ்சுவோம்..!

wpengine

கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும்.

wpengine