தலைமன்னார் கடற்பரப்பில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மிதந்துகொண்டிருந்த ஆயிரத்து 57 கிலோ பீடி மற்றும் இலைகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கடற்பரப்பில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 2 ஆயிரத்து 26 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களில் தலை மன்னார் கடற்பரப்பில் 3 ஆயிரத்து 84 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பீடி சுற்றும் இலைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பீடி இலைகளை கொண்டுவர முயற்சித்த 11 பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 10 ஆயிரம் கிலோ பீடி சுற்றும் இலைகள் இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.