பிரதான செய்திகள்

தலைப்பிறையை கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தல்

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில, குறித்த தினத்தில் தலைப்பிறை தென்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

வவுனியா மாவட்ட அரசியவாதிகளே! அப்பாவி தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

wpengine

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

wpengine

சம்பந்தன் எதிர்க்கட்சியில் செயற்பட முடியாது டளஸ் அலகபெரும

wpengine