செய்திகள்பிரதான செய்திகள்

தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை.!

இலங்கையில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்கள், குறைந்த அளவிலேயே கையிருப்பில் உள்ளது. மருத்துவ விநியோக பிரிவின் தகவலுக்கமைய, விநியோகிப்பதற்கு முடியாத பல மருந்துகள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கொலஸ்ட்ரோலுக்கான மருந்துகள் உள்ளிட்ட அவசியமான பல மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் விநியோகஸ்தர்களுக்கு நாணய கடிதங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இவ்வாறு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, குறித்த நிலையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ கோரியுள்ளார்.

Related posts

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சினை! வடமாகணத்திலிருந்து பணம் திரும்புகின்றது- ஆளுநர்

wpengine

பசிலை கடுமையாக தீட்டிய மஹிந்த

wpengine

இரட்டைக்கொலைக்கு ஏறாவூர் பள்ளிவாசல் ஆர்ப்பாட்டம்

wpengine