பிரதான செய்திகள்

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மரபணு பரிசோதனை

கொழும்பு ஷங்கிரிலா விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசீம் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகிய இரண்டு பேரினதும் அடையாளங்களை உறுப்படுத்தி கொள்வதற்காக மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய அவர்களது உடற்பாகங்களை கொண்டு மரபணு அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசீமின் சகோதரியின் குருதி மாதிரியை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு வழங்குமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் தந்தை மற்றும் மேலும் இரண்டு சகோதரர்களின் குருதி மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சஹ்ரான் ஹாசீம் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறுவதற்கு முன்னர் பயன்படுத்திய சொகுசு ரக மகிழூர்ந்துகள் உள்ளிட்ட 7 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பாக அரச பகுப்பாய்வாளரை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறும் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று இரண்டு வெடிப்புக்கள் இடம்பெறற் தெமட்டகொட மஹவில பகுதியிலுள்ள வீட்டில் அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் நேற்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் வெடிப்பு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரித்ததாக கூறப்படும் வீட்டையும் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Related posts

கட்டிடம் கட்ட கிரிக்கெட் போட்டி நடாத்தும் தென்னிந்திய நடிகர்கள்

wpengine

வவுனியாவில் குழந்தை கடத்தல் பரபரப்பு சம்பவம்

wpengine

கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள்

wpengine