பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது.


இதன் போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.


முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சிவசக்தி ஆனந்தன், தில்லையம்பலம் கெங்காதரன், லூட்ஸ் மாலினி வெளிற்றன், வடிவேலு இராசரட்ணம், பஞ்சாட்சரம் உமாபதி, ஞானசீலன் குணசீலன், சின்னத்தம்பி இராசன், கோபாலசாமி சற்குணபாலன், பர்னாந்து ஜீவநாயகம் சதானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.


தேசியக் கூட்டணியில் சிவசக்தி ஆனந்தன், தில்லையம்பலம் கெங்காதரன், லூட்ஸ்
மாலினி வெளிற்றன், வடிவேலு இராசரட்ணம், பஞ்சாட்சரம் உமாபதி, ஞானசீலன் குணசீலன், சின்னத்தம்பி இராசன், கோபாலசாமி சற்குணபாலன், பர்னாந்து ஜீவநாயகம் சதானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

Related posts

கேடுகெட்ட கீழ்தரமான சாக்கடையே மாகாண சபை உறுப்பினர் சுபைர்

wpengine

தனிமனித சுயகௌரவம் பற்றி தெரியாத மு.கா.கட்சியின் முதலமைச்சர் (விடியோ)

wpengine

எனது புகைப்படம் மற்றும் அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாது

wpengine