பிரதான செய்திகள்

தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக வடக்கில் வாழ்கின்றார்கள் மஹிந்த

நாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வை, தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்து அர்ப்பணித்தவர்கள் அனைவருமே மகத்தான மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

எனினும் அத்தகைய ஒரு மகத்தான மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் சித்தரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதனை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம் என்று அவர் கூறியுள்ளார்.

ி, தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு இன்று யுத்தமற்ற அமைதி கிடைத்திருப்பதும் எமது இராணுவ வீரர்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இலங்கை மக்களுக்கு மரண பயம் இன்றி வாழ்வதற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவ வீரர்களை நாங்கள் மிகவும் மரியாதையுடனும் பெருமையுடனும் நினைவு கூற வேண்டும் என்றும், அவர்களை பழிவாங்கும் முயற்சியை தோற்கடிப்பதற்காக நாம் முன்நிற்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Related posts

மஹி­யங்­க­னை அளுத்­கமை கல­வரம் முஸ்லிம் கவுன்ஸில் பொறுப்பு கூற­வேண்டும் -பொது­பல­ சேனா

wpengine

பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது! அதிர்ச்சி (வீடியோ)

wpengine

தனியார் பேருந்து சேவைகள் நாளை இடம் பெறாது!

Editor