பிரதான செய்திகள்

தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை”

“தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாபிரேரணை” என்று மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 2 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நல்லாட்சி அரசாங்கத்தை  தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களித்ததன்  காரணமாகே ஒரு  அமைக்க முடிந்தது.

இருந்த போதிலும் தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் எதிர் நோக்கும் எந்த ஒரு விடயத்துக்கும் நிரந்தர தீர்வினை வழங்க தவறியுள்ளது ஊழல் வாதிகளையும் ,அதிகார வர்க்கத்தையும் வளர்ப்பதில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது.

இன்று எமது கிராமத்தில் எதனோல் தொழிற் சாலை கூட பிரதமரின் கண்காணிப்புக்கு அமையவே இடம்பெற்று வருகின்றது இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு செய்த துரோகமாகவே நாம் பார்க்கின்றோம்.

ஆகவே கடவுள் ஒரு போதும் கெட்டவர்களுக்கு இடமளிக்க மாட்டார்.  வருகின்ற 4 ஆம்  திகதி இந்த குழப்பமான சூழ்நிலைக்கு நல்ல பதில் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காலி முகத்திடல் போராட்ட வீரர்கள் கஞ்சா செடி,போதை மாத்திரை பாவனை

wpengine

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்! சிறுமியின் நிர்வாண படம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor