வத்தளையில் தமிழ் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு வருகைத்தந்த அமைச்சருக்கு பிக்குகள் சிலர் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளைப் பிரதேசத்தில் வாழும் மக்களின் நீண்ட நாள் கனவு குறித்த பகுதியில் தமிழ் பாடசாலை ஒன்று இல்லை என்பதாகும்.
நீண்ட நாள் இழுப்பறியின் பின்னர் நல்லாட்சி மூலம் இன்று வத்தளைப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகைத் தந்த அமைச்சருக்கு பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் பாடசாலையை அமைக்க வேண்டாம் எனக் கூறி இவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த இடத்தின் ஒரு பகுதியிலேயே பாடசாலை அமைக்கப்படவுள்ளதாகவும், எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் பாடசாலை அமைப்பதில் பின்நிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர்பிக்குகள் உள்ளிட்டவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு அமைச்சர் வெளியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அமைச்சரை செல்ல விடாது தடுத்ததாகவும்,ஆனால் அமைச்சர் மாற்று வீதியின் ஊடாக புறப்பட்டு சென்ற போது அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூக்குரலிட்டதுடன், அமைச்சரின் பதாதைகளை தீயிட்டு எரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதிகளில் ஒன்றாக இந்த பகுதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.