பிரதான செய்திகள்

தமிழ் தலைமைகள்! தமிழ் மக்களுக்கு ஒன்றுமே பெற்றுக்கொடுக்கவில்லை- எஸ்.வியாழேந்திரன்

தமிழ் அரசியல் தலைமைகள்  கடந்த ஏழு தசாப்த காலமாக ஒரே விடயத்தைப்பற்றி பேசினார்களே தவிர, தமிழ் மக்களுக்கு ஒன்றுமே பெற்றுக்கொடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின்  செங்கலடி-பதுளைவீதி பிராந்திய மக்களுக்கான  மக்கள் பணிமனை திறப்பு விழா   நடைபெற்றது.  

இந் நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றுகையில்…

எமது சகோதர,சமூகமான முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு தங்கள் மக்களின் அபிவிருத்தி சார்ந்த அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்ததால் அவர்கள் கடந்த காலத்தில் அபிவிருத்திக்காக போராடி இன்று இந்த மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் எந்த உரிமையையும் இழக்காத சமூகமாகத்தான் காணப்படுகின்றனர்.

முஸ்லிம் மக்களின் உடலை எரிக்க கூடாது, புதைக்க வேண்டுமென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கினார்கள்.அரசாங்கத்துடன் பேசினார்கள்.எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்களோடு பேசினார்கள்.வாக்களிப்பிலே சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தார்கள்.

அவர்கள் கேட்டது கொரோனாவால் தமது சமூகத்தில் இறந்தவர்களை புதைக்க வேண்டும்;எரிக்க கூடாது என்ற கொள்கையை முன்வைத்து ஆதரவை வழங்கினார்கள். ஆனால் எமது அரசியல் தலைவர்களைப் பொறுத்தளவுக்கு கடந்த ஏழு தாசாப்த காலமாக ஒரே விடயத்தைப்பற்றி பேசினார்களே தவிர தமிழ்மக்களுக்கு ஒன்றுமே பெற்றுக் கொடுக்கவில்லை

Related posts

அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்!

wpengine

மாளிகாவத்தையில் இலவச மருத்துவ முகாம்.

wpengine

வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது – சஜித் பிரேமதாஸ

wpengine