பிரதான செய்திகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை கொண்டு வர முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்! ஏன் மன்னார் அதிபர் இடமாற்றம் செய்யவில்லை

wpengine

மூதூர் வகாப்தீன் பசீர் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

wpengine

அஸ்வெசும மேன்முறையீடுகளை கணினி கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்கான கால அவகாசம் நிறைவு!

Editor