பிரதான செய்திகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக தனியார் பஸ்கள் சேவையில்!

தமிழ் மற்றும் சிங்களபுத்தாண்டு விடுமுறை காலத்தில் கொழும்பில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தனியார் பஸ் சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தேவையின் அடிப்படையில் பல்வேறு இடங்களுக்கு மேலதிக பஸ்கள் இயக்கப்படும் என்றார். அரை சொகுசு பஸ் கட்டணத்தில் விசேட பஸ்கள் சேவையில் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

18வயது குறைந்த பெற்றோர்களுக்கு சட்ட நடவடிக்கை

wpengine

கிழக்கு முஸ்லிம் தனி மாகாணம்! மு.கா.கட்சியின் கையாலாகா தனமா?

wpengine

வடமேல் மாகாண தமிழ் மொழி பாடசாலை பிரச்சினை தொடர்பில் முதலமைச்சருடன் கலந்துரையாடல்

wpengine