பிரதான செய்திகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களில் விலைகள் குறைப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வருவதால், சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் பலன் நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையே உட்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு மற்றும் மிளகாய் போன்ற பொருட்கள் நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், இவ்வாறான இறக்குமதி பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும் என்றும், அதன் பயனை நுகர்வோர் பெறுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சவுதி இளவரசர் 6400 கோடி ஊழல்! திருப்பி செலுத்த நடவடிக்கை

wpengine

இந்தோனேசியாவில் தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்!

Editor

இணைய வழிக் கணக்குகள் பரிமாறப்படுவதாக சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine