பிரதான செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகளுடன் இரத்தினபுரி மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)
இரத்தினபுரி வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இரத்தினபுரி ஜன்னத் ஜூம்ஆ பள்ளிவாயலில் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார்.

 

இவ்விசேட கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்று அன்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி உதவுவதற்காகவே இந்த பிரதேசத்துக்கு தாங்கள் வந்ததாகவும் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து விபரங்களையும், சேதவிபரங்களையும் அங்கு கோரியதுடன் மீள்க்கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் தாங்கள் செல்ல முடியாவிட்டாலும் அடையாளத்துக்காக ஒரு சில தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு தாம் இன்று (2017.06.03) காலை சென்றதாக அவர்கள் தெரவித்தனர்.

இந்த சந்திப்பின் போது மக்கள் காங்கிரசின்; பிரதித்தலைவர் ஜெமீல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் றிஸ்வான், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன்; அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் உட்பட மக்கள் காங்கிரசின் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி முதலிடம் (விடியோ)

wpengine

இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்த தொழிலதிபர்

wpengine

ஜனாதிபதி சட்டத்தரணியாக தழிழர் நியமனம்

wpengine