ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் வடக்கு பயணத்தில் செயலணியின் முஸ்லிம் உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலணியில் அங்கம் வகிக்கும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினா் கலீல் உல் ரஹ்மான்,தொிவித்தார்.
செயலணியின் அமர்வுகளில் பங்கேற்குமாறே தமக்கு கூறப்பட்டுள்ளது.
எனவே பண்டாரநாயக்க சா்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அமா்வுகளில் தாம் பங்கேற்பதாக அவா் கூறியுள்ளார்.
எனினும் தமிழ்ப் பிரதேசங்களுக்கு தாம் ஞானசார தேரருடன் செல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை செயலணியில் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகளே கையாளவேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த பயணத்தில் பங்கேற்வில்லை.
இதேவேளை செயலணியின் செயற்பாடுகளை அவதானித்த பின்னர், எதிா்காலத்தில் முஸ்லிம் பிரதேச மக்களுடன் கலந்துரையாடல் தேவைப்பட்டால், அல்லது முஸ்லிம் சமூகத்தரப்பால் கோாிக்கை விடுக்கப்பட்டால், செயலணியுடன் குறித்த பிரதேசங்களுக்கு செல்வது தொடா்பில், தாம் முடிவெடுக்கவுள்ளதாக கலீல் உல் ரஹ்மான் தொிவித்தார்