செய்திகள்பிரதான செய்திகள்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலை நான் தான் அடையாளம் கண்டேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலை உறுதிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னையே அனுப்பினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலை நான் தான் அடையாளம் கண்டேன். அதன் பிறகு பிறகு அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது

இராணுவக் கட்டுப்பாடுகளை உடைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் தொடர்பில் ஆராய்வதற்கான வாய்ப்புக்கள் எங்களுக்கு இருக்கவில்லை.

அப்போது, இராணுவத்தினரின் கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் எங்கு உள்ளது என்பது உண்மையில் எனக்கு தெரியாது.

ஆயுதக் கலாசாரத்தை ஒழித்து இன்று மக்கள் நிம்மதியாக வாழும் நிலை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளது.

இதற்கு அத்திவாரம் இட்டவர்கள் நாங்கள் தான். இந்த தாற்பரியத்தை தற்போதைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

Maash

பலத்த மழை காரனமாக 45 பேர் உயிரிழப்பு..!

Maash

அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரிப்பதட்கு திட்டமிடுகின்றது .

Maash