வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து நிகழ்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? எனும் தொனிப்பொருளில் தமிழர் மரபுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான ப.உதயராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாள் சிவ.கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலர்ந்து கொண்டனர்.
இதன்போது கருத்தாளர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வேட்பாளர்கள் மக்கள் முன் பதிலளித்தனர்.
அந்த வரிசையில் முன்னாள் பிரதி அமைச்சரும், பொதுஜன பெரமுன வேட்பாளருமான காதர் மஸ்தான் உரையாற்றி முடிந்த பின் அவரிடம் அங்கு வந்திருந்த நபர் ஒருவர் கேள்வி எழுப்பிருந்தார்.
குறித்த நபர் கேள்வி எழுப்பிய போது தமிழ், முஸ்லிம் என இவனவாதமாக பேசியதாக அங்கிருந்த பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் நெறியாளரிடம் தெரிவித்தனர்.