பிரதான செய்திகள்

தமிழரை கிழக்கில் முதலமைச்சராக வேண்டும் வியாளேந்திரன் (பா.உ)

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரையேமுதலமைச்சராகக் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி புனரமைப்பு நிறைவடைந்த நிலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு ஊடாக நாம் முன்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இன்னும் ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டும். நாங்கள் தான் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவோம், நாங்கள் தான் அடுத்த முறையும் கிழக்கில் முதலமைச்சராக வருவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே முஸ்லிம் மக்களுக்குள்ளே சரியான ஒற்றுமையும், உறுதியான கருத்துப்பாடும் இருக்கின்றது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை, சரியான புரிந்துணர்வில்லை.

இந்த நிலையில் எவ்வாறு கிழக்கு மாகாணசபையை எதிர் கொள்ளப் போகின்றோம் என கேள்வியெழுப்பியுள்ளார்.

Related posts

றியாஜ் பதியுதீன் தொடர்பில் பொய்யான செய்தி! மனைவி முறைப்பாடு

wpengine

சஜித் என்னைப் பொம்மையாக்க வேண்டாம்.மனசாட்சிக்கு இணங்கவே ஆதரவளிப்பேன்

wpengine

“பிக் பாஸ்” நிகழ்ச்சி ப்ளுவேல்லாக மாறும் நிலை

wpengine