ஈஸ்டர்ஞாயிறு குண்டுவெடிப்பு பரபரப்புக்கு மத்தியில் கூட்டைப்பின் குடுமிப்பிடி சண்டை முடிவுக்கு வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த உள்ளுராட்சி மன்றதேர்தலில் ஆசனப்பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளால் தொடர்ந்து கொண்டிருந்த முறுகல் நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் பத்து வேட்பாளர்களில் ரெலோவிற்கு இரண்டு ஆசனங்கள் வழங்குவதாக தமிழரசுக் கட்சியால் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ரெலோவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ரெலோ கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு ஆசனம் வழங்கப்படவுள்ளதாக ரெலோ முக்கியஸ்தர் ஒருவர் மூலம் தெரியவருகின்றது.
இதே போன்று புளெட்டில் சித்தார்த்தன் மற்றும் கஜதீபனுக்கும் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும். தற்போது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு பெண்வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதற்காக யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் மாமனிதர் ரவிராஜின் மனைவியை பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க தமிழரசுக்கட்சி முயன்றுவருவதாகவும் அறியமுடிகிறது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் நடந்த ரெலோ இயக்கத்தின் மகாநாட்டில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 2018.12.31க்குள் அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் அராசாங்கத்திற்கு வழங்கிவரும் சகல ஆதரவிலிருந்தும் தங்கள் கட்சி விலகிகொள்ளும் என கூறியிருந்தார் அத்துடன் 2015ம் ஆண்டு தமிழ் அரசியில் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாகவும் பாராளுமன்றத்தில் சூழுரைத்தவர் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட இருக்கவில்லை. தமிழீழ கோரிக்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய குட்டிமணி தங்கத்துரையின் வாரிசு என தன்னைத்தானே கூறிக்கொள்பவர் அவர்களின் பாதையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வெறும் சலுகைக்கான அரசியலை செய்துவருவதோடு ஆளுங்கட்சியின் பதவியான பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவியில் இன்றும் பதவி வகித்துவருகிறார் என்பது குறிப்படத்தக்கது.
வடக்கின் எல்லை காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட புளெட் முள்ளி;வாய்க்காலில் ஆயுதபோராட்டம் மெனிக்க செய்யும் தருணத்தில் உள்ளபோது சர்வதேசம் மற்றும் தமிழ்கட்சிகள் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியபோது யுத்தத்தை நிறுத்தினால் புலிகளுக்கு ஒட்சிசன் கொடுத்தது போல் ஆகிவிடும் எனகூறியிருந்தது. இவ்வாறக தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை மறைத்து தமிழ் தலமைகள் ஒன்றுபட்டால்தான் உரிமைகளை வென்றெடுக்கமுடியும் என்ற அடிப்டையில் தமிழ் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்தே புளெட் ஆனால் மீண்டும் தமிழ் மக்களுக்கு விரோதமான செயலை செயற்படுத்தி வருகின்றது.
தமிழரசுக்கட்சி தன்னிச்சையான முடிவுகளை எடுக்கின்றது தமிழ் மக்களின் நலன்களை புறந்தள்ளுகிறது என ஊடகங்களில் வீரஆவேசபேச்சுக்களை கூறியவர்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கு ஆசன ஒதுக்கீட்டில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதால் தமிழ் தேசியஇனத்தின் நீண்ட காலப் பிரச்சினை பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.