Breaking
Sun. Nov 24th, 2024

தமிழரசுகட்சி தனித்து எடுத்த முடிவை ஏற்றுகொள்ள முடியாது. நாளை தமது முடிவை அறிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று டெலோ கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசுகட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கூறியிருகின்ற நிலையில் நேற்றையதினம் ரணில்விக்கிரமசிங்கவுடன் நீங்களும் சித்தார்த்தன் அவர்களும் கதைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் உங்களுடைய நிலைப்பாடும் இவ்வாறனதாக தான் இருக்கின்றதா?

என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இவாறான செய்தி தவறானது. நானும், சித்தார்த்தனும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரை சந்தித்ததென்பது தவறான செய்தி என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

என்னை பொறுத்தமட்டிலே எனக்கொரு ஆதங்கம் இருக்கிறது என்பதனை கூற விரும்புகின்றேன்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதனை எதிர் பார்க்கின்றேன்.

அந்தவகையிலே என்ன முடிவெடுகின்றதென்பதை பல்கலைகழக மாணவர்கள் அவர்களினுடைய திறமைகளின் அடிப்படையில் இந்த ஐந்து கட்சிகளையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றார்கள்.

அந்த ரீதியிலே என்னை பொறுத்தமட்டிலே இந்த ஐந்து கட்சிகளும் ஒன்றாக ஒரு கருத்தை வெளியிட்டால் மிகச்சிறப்பாக, மக்களுகொரு சந்தோசமாக, மிக எழுச்சியாக மக்கள் தங்களுடைய வாக்குகளை போடுகின்ற நிலைமை இருக்குமென்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருகின்ற ஏனைய கட்சிகளோடு இணைந்து அறிவித்தலை செய்திருந்தால் என்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆகவே இவ் அறிவித்தல் என்பது நாங்களும் கட்சியில் பல தீர்மானங்களை எடுத்திருகின்றோம். இந்த ஒற்றுமை கருதி நாங்கள் வெளியிலே பல கருத்துக்களை சொல்வதில்லை. ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டால் அதை நாங்கள் தீர்மானம் எடுத்திருகின்றோம்.

அந்த தீர்மானத்தின் பிரகாரம் ஏனைய பங்காளி கட்சிகளோடு சேர்ந்து எங்களுடைய முடிவை அறிவிப்போம் என்று கூறியிருந்தால் அது உண்மையிலே சிறப்பாக இருக்குமென்று நான் நினைகின்றேன்.

அந்தவகையிலே இந்த முடிவை பின்பற்றுகின்ற இரண்டு கட்சிகளும் நாங்கள் பின்பற்றுகின்ற ஒரு நிலையை அல்லது இதைதான் செய்ய வேண்டும் என்ற அந்த நிலை காணப்படுவது என்னால் ஏற்றுகொள்ள முடியாது.

ஆனால் நாளைய தினம் எங்களுடைய கட்சியின் முடிவை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம். என்னை பொறுத்தமட்டிலே இந்த விடயம் கவலை தருகின்றதென்பதனையும் கூறுகின்றேன் என தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *