Breaking
Tue. Apr 16th, 2024

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிற்பகலில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 232 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்பட இருக்கிறது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் டிராபிக் ராமசாமி மற்றும் சட்டப்பஞ்சாயத்துக்கு இயக்கம் சார்பில் தொடரப்பட்டுள்ளது. அதில், திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி மர்மம் நீங்கும் வரை சட்டசபைத் தேர்தல் முடிவை வெளியிட கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், பிற்பகலில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *