Breaking
Mon. Nov 25th, 2024

(நாச்சியாதீவு பர்வீன் / வாழைச்சேனை முர்சித்)

கிழக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் மனவருத்தத்தை தருகிறது , தன்னை அதிகாரமிக்கவராக காட்டிக்கொள்ள , சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அவரது எதிர்கால அரசியல் பிரயாணத்திற்கு உகந்ததாக தெரியவில்லை என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவண மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (03.06.2016) அன்று வெள்ளிக்கிழமை  கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் இடம் பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

நல்லாட்சி அரசாங்கத்திற்கு செய்த உதவிகளின் விளைவுகளை நாங்கள் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளோம். யுத்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு இது ஒரு ஆறுதலாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.

வாழைச்சேனை கண்ணிபுரத்தில் இவ்வீடமைப்பு திட்டத்தை கொண்டுவருவதற்கு அரும் பாடுபட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், அப்பிரதேசத்தில் இவ்வாறான காணிகளை கண்டால் எதிர்காலத்தில் இன்னும் பல வீட்டுத்திட்டங்களை ஆரம்பிப்பார்.ab84e709-f14a-4928-8bec-fda63a2136d0

சிறுபான்மை சமூகத்தினுடைய நிகழ்ச்சி நிரல் தேசியமாக பூரணப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் இந்த ஆட்சியாளர்களை நம்பக் கூடிய நிலைமை சிறுபான்மை அரசியல் தலைவர்களிடையே காணப்படுகின்றது.

இந்த விடயத்தை பௌத்த பேரினவாதிகள் இதனை குழப்புவதற்காக திட்டமிடுகின்றார்கள். சில அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயற்படுகின்றார். தேசியத்தில் திட்டுகிறார்கள், மாவட்டத்தில், மாகாணத்தில் என்று சொல்லக் கூடியதாக உள்ளது.

சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நீண்ட தூரம் அரசியல் பிரயாணத்திற்கு உகந்ததாக எங்களுக்கு தெரியவில்லை.
மனித நேயத்தோடு பேசுகின்ற ,பிரச்சனைகளை தேசியத்திலும்,மாகாணத்திலும் மாவட்டத்திலும் அதிகம் பேசுகின்ற, செய்கிற அரசியல்வாதிகளாக, அதிகாரிகளாக தங்களை தாங்கள் மாற்றிக் கொள்ளாத வரை சிறுபான்மை இன மக்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியாது.

கிழக்கு முதலமைச்சரின் அடாவடித்தனமாக பழிவாங்கல்கள் உத்தியோகத்தர்களை, ஊழியர்களை இரவோடு இரவாக  இடமாற்றுகின்ற கேவலமாக நிகழ்ச்சி நிரலை செய்து கொண்டிருப்பார் என்றால், எதிர்வருகின்ற  மாகாண சபையிலே அவர் இதற்காய் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அரசியல் என்று வருகின்ற பொழுது தாங்கள் எதைப் பேசிக் கொண்டாலும், சண்டை பிடித்துக் கொண்டாலும் நியாயம் என்கிற வகையிலே உடன்பாடு தேவைப்பட வேண்டிய தேவைப்பாடு அரசியல் வாதிகளுக்கு இல்லாமல் இருக்கும் என்று சொன்னால் அது வெற்றி பெற்ற அரசியலாக எதிர்காலத்தில் பதிவு செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.

நாங்கள் பணம் கொடுத்தோ, அரிசி கொடுத்தோ, மின்சார பட்டியல் கட்டியோ அரசியல் செய்பவர்கள் அல்ல. எங்களால் உங்களுக்கு செய்யக் கூடியதை, இதனைத்தான் செய்ய முடியும், எங்களது பாதுகாவலனாக, எல்லைக் காவலனாக, தங்களது கஷ்டத்தை பங்கெடுப்பவனாக இருப்போம் என்ற வேண்டுதலை தான் நாங்கள் தேர்தல் காலங்களின் உங்கள் மத்தியில் வைத்தோம்.அதனையே செய்கிறோம். வீட்டுக்கு வீடு அரசி, தண்ணீர் பட்டியல் கட்டி, பரிசிசூட்டில் வந்து இறங்கி முதலமைச்சராகியவர்களுக்கு மக்களுடைய, அரச அதிகாரிகளுடைய கஷ்ட நஷ்டங்கள், அரசியல்வாதிகளுடைய நலன் பிரச்சனைகள் இவர்களுக்கு தெரியாது என்று கூறினார் என்றார்.

மட்டக்களப்பு வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார்,  கண்ணகிபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஜெ.கிருஸணந்த், மட்டக்களப்பு வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *