பிரதான செய்திகள்

தனியார் மயமாக்கல்! அரசாங்காத்திற்கு எதிராக பிரச்சாரம் -அனுர குமார திஸாநாயக்க

அரச நிறுவனங்களை மறைமுகமாக தனியார் மயமாக்க முயற்சித்து வரும் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய பிரச்சாரம் ஒன்று நடாத்த ஜே.வி.பி திட்டமிட்டு வருகின்றது.

இவ்வாறு அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் அதிக ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, இதற்கு எதிராக அரச நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மயமாக்க முயற்சித்து வரும் அரச நிறுவனங்களில் கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க விமான நிலையம், கல்பிட்டி லகூன், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி நிலையங்கள் ஆகியன உள்ளடங்குவதாகவும் இவ்வாறு தனியார் மயமாக்கினால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவே வருமானத்தை உயர்த்தும் நோக்கில் இவ்வாறு அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிதாக மூன்று அமைச்சர்கள் நியமனம்

wpengine

தாஜுதீன் கொலை: டிபெண்டரை கையேற்குமாறு நீதிமன்றம் அழைப்பு

wpengine

முசலியில் முப்பெரும் விழா! பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில்

wpengine