பிரதான செய்திகள்

தனியார் நிறுவனம் ஒன்றின் முஸ்லிம் காவலாளி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி, கர்பலா வீதி, மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் ஸலாம் (சுமார் 65 வயது) எனும் வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது ஒரு இயற்கை மரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளித்த அரச நிர்வாகி வே.சிவஞானசோதி’ – ரிஷாட்!

Editor

முஸ்லிம் விரோத அமைப்புடன் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரில் நாளை உரை

wpengine

உதய கம்மன்பில,முஸ்ஸமில் தொடர்பில் பெங்கமுவே நாலக தேரர் கருத்து

wpengine