செய்திகள்பிரதான செய்திகள்

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது.

அதன்படி, தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

* 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக 9,500 ரூபாவால் உயர்த்தப்படும்.

* 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 700 ரூபாவிலிருந்து 1,080 ரூபாவாக 380 ரூபாவால் உயர்த்தப்படும்.

* 2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக 3,000 ரூபாவால் உயர்த்தப்படும்.

* 2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக 120 ரூபாவால் உயர்த்தப்படும்.

Related posts

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் “ஒட்டுனிகள்” ஆதரவளிப்பதில்லை

wpengine

அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை வசதி

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

wpengine